திருகோணமலைக்கு விரைந்த சவேந்திர சில்வா - இராணுவத்துக்கு புகழாரம்

திருகோணமலைக்கு விரைந்த சவேந்திர சில்வா - இராணுவத்துக்கு புகழாரம்

கொரோனாவின் தாக்கம் ஸ்ரீலங்காவில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டிருந்தமையாலேயே நாட்டில் நோய்த்தொற்றானது சமூகப் பரவலடையாது கட்டுப்படுத்த முடிந்ததாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் செய்து, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

திருகோணமலை மாவட்டத்தில் பல தனிமைப்படுத்தல் முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அவற்றில் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு திரும்பி வந்த எம் நாட்டை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை விடயங்களையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஜனாதிபதி மற்றும் பிரமரது பணிப்புரைக்கு அமைவாகவே இவ்விஜயத்தை மேற்கொண்டேன்.

இதேவேளை, போதைப்பொருள் பாவனை மாற்றும் அதனை சட்டவிரோதமான முறையில் நாட்டினுள் கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகிறது.

அவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.