ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடம்! தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்

ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடம்! தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவை அடுத்து நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரிவசத்திற்கு அறிவிக்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பான கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை எனவும் அந்த கடிதம் கிடைத்த பின்னர் வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடத்திற்கு அவரது மகன் ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.