எங்களை பாதுகாப்பாக இருக்க விடுங்கள்: நீங்கள் பதுங்கு குழிக்கே செல்லுங்கள்: டிரம்புக்கு கொடுக்கப்பட்ட பதிலடி

எங்களை பாதுகாப்பாக இருக்க விடுங்கள்: நீங்கள் பதுங்கு குழிக்கே செல்லுங்கள்: டிரம்புக்கு கொடுக்கப்பட்ட பதிலடி

அமெரிக்காவில் இடம்பெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்ட காலத்தில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பான பாதாள அறைக்குள் இருந்ததாக செய்திகள் வெளியாகின.

இதன்பின் கேப்பிடல்ஹில் தன்னாட்சி மண்டலம் என்று சியாட்டில் மாகாணத்தின் ஒரு பகுதியை அறிவித்த டிரம்ப் சியாட்டில் மேயர் ஜென்னி டுர்கனை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இந்நிலையில் அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுத்த சியாட்டில் மேயர் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்க விடுங்கள், உங்கள் பதுங்கு குழிக்கே மீண்டும் செல்லுங்கள் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வாஷிங்டன் கவர்னர் இன்ஸ்லீ ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திறமை இல்லாத ஒரு நபர் வாஷிங்டன் மாநில விவகாரத்துக்குள் தலையிடக் கூடாது என்று விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.