
அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த மேலும் 10 அமைச்சு பதவிகள்
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள 5 அமைச்சர் பதவிகளும், 5 ராஜாங்க அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பதவிகள் எதுவுமின்றி இருக்கும் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலருக்கு இந்த அமைச்சு பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு இம்முறை அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.