
ஜேர்மனியில் சாதித்த இலங்கை வீரர் -தெற்காசிய சாதனையும் தகர்ப்பு
இத்தாலியில் வசிக்கும் இலங்கையரான யூபுன் அபேகூன் தெற்காசிய 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய சாதனைணையப் படைத்துள்ளார்.
ஜேர்மனியில் இன்று நடைபெற்ற 100 மீறறர் ஓட்டப்போட்டியில் அவர் 10.16 செக்கனில் ஓடி முடித்து இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை முறியடித்தார்.
இவரின் இந்த சாதனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மஹேல மற்றும் சங்கக்கார உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த சாதனையை இலங்கையை சேர்ந்தவரான ஹிமாசா ஈசான் 10.22 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.