ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிக்கு தொற்றியது கொரோனா!

ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிக்கு தொற்றியது கொரோனா!

வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்திற்கு வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் சென்ற இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவிசாவளை – பனாகொட இராணுவ முகாமின் லெப்டினன்ட் கேர்ணல் தர அதிகாரிக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த இராணுவ அதிகாரி ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினரை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.