நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்துக்கும் அதிகமான PCR பரிசோதனைகள் நிறைவு

நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்துக்கும் அதிகமான PCR பரிசோதனைகள் நிறைவு

நாட்டில் இதுவரையில் இரண்டு இலட்சத்து 41 ஆயிரத்து 631 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட்19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 625 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

அதேநேரம், தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 331 பேர் இன்று தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை 38 ஆயிரத்து 393 தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.

தற்போது, 64 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6 ஆயிரத்து 624 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொவிட் 19 பரவல் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த மேலும் 20 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.