தங்கத்தின் விலை எப்போது குறையும்..? நகை வியாபாரிகளின் முக்கிய அறிவிப்பு

தங்கத்தின் விலை எப்போது குறையும்..? நகை வியாபாரிகளின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை குறைப்பு அமுலுக்கு வருவதற்கு அண்ணளவாக ஒருமாத காலம் எடுக்கும் என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமான வரி மற்றும் 15 சதவீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தீர்மானித்திருந்தார்.

இந்த நிலையில், தங்கத்தின் விலை குறைப்பு தொடர்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இரா.பாலசுப்ரமணியம்   தெரிவித்தார்.

இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருமாயின், ஒரு பவுண் 5 ஆயிரம் ரூபா அளவில் குறைவடைவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.