எஸ் பி பாலசுப்ரமணியம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய சோதனையின் போது அவருக்கு கொரோனா இல்லை என அறிக்கை வெளியாகியுள்ளதாக அவரின் புதல்வர் எஸ் பி பி சரண் தெரிவித்துள்ளார்.
எஸ் பி பி சரண் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5 ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும், செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடனேயே சுவாசிக்கின்றார் என்ற தகவலையும் அவரின் புதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்டுள்ளதாகவும், ஐ பேட் மூலமாக விளையாட்டு போட்டிகளை பார்வையிட்டு வருவதோடு, எழுத்து மூலம் தனக்கு தேவையானவற்றை கேட்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய சிகிச்சை முடிவுகளின் படி அவருக்கு கொரோனா நெக்கடிவ் முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எஸ் பி பி சரண் அறிவித்துள்ளார்.