ஸ்ரீலங்காவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வாக்குறுதி

ஸ்ரீலங்காவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வாக்குறுதி

ஸ்ரீலங்காவின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமெரிக்கா ஒருபோதும் செயற்படாதென ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உதவி திட்டங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவின் உதவி திட்டங்கள் எவையும் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவையல்ல.

பரஸ்பரம் இறைமையை மதித்து பாதுகாப்பதே வலுவான ஒத்துழைப்பாக இருக்கும்.

எங்களின் பல திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து சமீபகாலங்களில் பிழையான கருத்துக்கள் நிலவுகிறது.

ஆனால், எங்களின் எந்த திட்டங்களும் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல.

ஸ்ரீலங்காவுக்கான வளமான திட்டங்களை உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் நாங்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.