இங்கிலாந்துக்கு மீண்டும் கொரோனா எச்சரிக்கை

இங்கிலாந்துக்கு மீண்டும் கொரோனா எச்சரிக்கை

கடந்த மே மாதத்திற்கு பின்னர் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 2,988 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, சர்வதேச சுகாதார பிரிவினர் இது தொடர்பில் இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் இதுவரையில் 3 இலட்சத்து 47,152 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அங்கு 41,551 பேர் மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.