கொரோனாவை மறந்த ஸ்ரீலங்கா மக்கள்
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்சமானநிலை குறைவடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமுகத்திற்குள் நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாமையினால் குறித்த அவதானம் குறைவடைந்துள்ளாதாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் 19 தொற்றினால் இலங்கையில் இதுவரை 12 மரணங்கள் பதிவாகியுள்ளன. நோய் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதால் மக்கள் அது தொடர்பில் கவனத்தில் கொள்வது வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக வைரஸ் தொற்று சமுகத்திற்குள் இலகுவாக பரவும் தன்மையும் இருப்பதாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனினும் அவற்றிற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்திலேயே அவை வெற்றியளிக்கும். இதனால் கொரோனா வைரஸ் தொடர்பில் காணப்படும் அவதான நிலை குறித்து மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.