நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நேற்றைய தினம் 2 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியான மேலும் 7 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொவிட் 19 தொற்றுதியான 186 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.