யாழ்ப்பாணம் மீசாலையில் பகுதியில் வாள் வெட்டு! ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இன்று இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார் சசிவர்மன் (28-வயது) என்பவரே காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024