முல்லை தேவிபுரத்தில் துயரம் - விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணம்

முல்லை தேவிபுரத்தில் துயரம் - விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது

இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஜன் என்ற சிறுவனே உயிரிழந்தவன் ஆவான்

இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என உறவினர்களின் உதவியோடு தேடியபோது கிணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக உறவினர்களின் உதவியோடு மீட்டு புதுக்குடியிப்பு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது அச்சிறுவன் இறந்திருப்பது தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.