இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை! அமைச்சர் வெளியிட்ட தகவல்
அடுத்த ஒரு வருடத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “அமைச்சரவைக் கூட்டத்தில் நாணய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று நோயால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக இலங்கை தற்போது நாணய மாற்று நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
நாணய பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இறக்குமதி தடை நீடிக்கப்பட்ட போதிலும், இலங்கையில் அடுத்த ஒரு வருடத்திற்கு விற்பனைக்கு போதுமான வாகனங்கள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.