அவதானமாக இருங்கள்! மக்களுக்கு விசேட அறிவிப்பு
மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு இன்று அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திருக்கோவில், தம்பிலுவில், உமிரி, பொத்துவில், கல்முனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்கள் கரிசனை கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.