திருமணம் முடித்து ஒரு வருடம்! வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்

திருமணம் முடித்து ஒரு வருடம்! வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளார். தாயார் அயலவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தந்தை காலை 7 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளார். பின்னர் 7.30 மணியளவில் இளைஞனின் தாயார் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததினை அவதானித்துள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 26வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளம் குடும்பத்தவராவார்..

குறித்த இளைஞர் திருமணம் முடித்து ஒருவருடமாகிய நிலையில் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருந்தனர்

அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மற்றும் பண்டாரிக்குளம் பொலிஸாருடன், கிராம சேவையாளரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.