தேங்காயில் ஹெரோயின்! தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிக்கிய ஐவர்

தேங்காயில் ஹெரோயின்! தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சிக்கிய ஐவர்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகே ஹெராயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஹெராயின் போதைப்பொருளை தேங்காய்களில் மறைத்து வைத்திருந்ததை மொரகாஹென பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது 500 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மொரகாஹென பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.