வேகமெடுக்கும் புதிய அரசமைப்பு உருவாக்கம் -நியமிக்கப்பட்டது நிபுணர் குழு

வேகமெடுக்கும் புதிய அரசமைப்பு உருவாக்கம் -நியமிக்கப்பட்டது நிபுணர் குழு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்தநிலையில் அதற்குத் தேவையான முன்மொழிவுகளை வழங்க நிபுணர் குழுவையும் அமைச்சரவை நியமித்துள்ளது.

நிபுணர்குழுவை நியமிப்பது தொடர்பில் நேற்று (02.09.2020) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், நிபுணர் குழுவில் தமிழ் – முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் உட்பட 9 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.