கண்டியின் பல பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் தொடரும் ஆய்வுகள்..!

கண்டியின் பல பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் தொடரும் ஆய்வுகள்..!

கண்டியின் சில பகுதிகளில் இன்று முற்பகல் வேளையில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மையம் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பல்லேகல-மஹகந்தராவ பகுதியில் உள்ள ஆய்வகத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும்இ கண்டி - தலத்துஒயா பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நில நடுக்கமானது முக்கிய சில நில எல்லைகளுடன் தொடர்புப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல்,புவிச்சரிதவியல் ஆய்வு மையம் மற்றும் சுரங்கப் பணியகத்தை சேர்ந்த 02 குழுக்கள் இந்த நடுக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.