மட்டக்களப்பு-கல்முனை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், தாளங்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.
நேற்றிரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, உந்துருளி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவரே பலியானதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.