கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,073ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இரண்டு நபர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,879 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.