உதவி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
பயற்சிகளை நிறைவு செய்துள்ள 420 உதவி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் ஓரிரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட, வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் ஆசிரியர் கலாசாலைகளுக்கு சென்று பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 420 உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஓரீரு வாரங்களில் அவர்களுக்கான நியமனம் வழங்கும் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், மத்திய மாகாண முன்னாள் சபைத் தலைவர் மதியுகராஜா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.