கண்டியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

கண்டியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

கண்டியில் நேற்று இரவு உணரப்பட்ட பூமியதிர்ச்சி தொடர்பான ஆய்வுகளை, தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கச் சென்ற புலனாய்வாளர்கள் குழு சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி குறித்த பூமியதிர்ச்சிக்கு மூன்று காரணங்களை முன்வைக்கின்றனர்.

கல் குவாரியில் துளையிடுவது பூமியதிர்வாக பதிவாகி இருக்கலாம்.

அல்லது சுண்ணாம்பு அடுக்குகளின் சரிவு அதற்கு காரணமாக இருக்கலாம்.

இதுவும் இல்லை என்றால் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அருகில் வெள்ள அபாய அறிவிப்புக்கான ஒரு உந்துதலாக இருக்கலாம் என்ற 3 காரணங்கள் முன்வைக்ப்படுகின்றன.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் புவியியல் பிரிவு மூத்த இயக்குநர் உதய டி சில்வா இதை தெரிவித்தார்.

கண்டி, தலாத்துஓயா, திகன பிரதேசங்களில் ​நேற்று (29) இரவு உணரப்பட்ட அதிர்வு தொடர்பான ஆய்வுகளை, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையத்தின் புவியியல் பிரிவுக்கு பொறுப்பான நில்மின தல்தென உள்ளிட்ட விசேட நிபுணர்கள் குழாமால், இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.