இணையளத்தளத்தில் வெளியிடப்படவுள்ள அறிக்கை ..!

இணையளத்தளத்தில் வெளியிடப்படவுள்ள அறிக்கை ..!

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இணையளத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை - ஹக்மன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அவற்றின் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

எனினும் தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாகவே குறித்த அறிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.