![](https://yarlosai.com/storage/app/news/6a9343335fdc431028110a62cf64d132.jpg)
பஸ் வண்டிகளின் இறக்குமதியை நிறுத்த திட்டம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு தேவையான பஸ் வண்டிகளின் இறக்குமதியை நிறுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ச்செஸி மற்றும் எஞ்சின் கட்டமைப்புக்களை மாத்திரம் இறக்குமதி செய்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு தேவையான சகல பஸ் வண்டிகளையும் இலங்கையிலேயே பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏக்கலையிலுள்ள பொறியியல் நிறுவனத்தை பார்வையிடுவதற்கென மேற்கொண்டிருந்த கண்காணிப்பு விஜயத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது பஸ் வண்டியொன்றை தயாரிப்பதற்கு லக்திவ பொறியியலாளர் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 3 முதல் 4 மாதங்களே தேவைப்படுமென திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.