இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கை

பெருந்தோட்டங்களில் அரைநாள் பெயரில் வேதனம் வழங்குவது தொடர்பில் எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலம் முதல் அந்த நடைமுறை பின்பற்றி வருவதனால், அது தொடரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அரைநாள் பெயரில் வேதனம் வழங்கப்படுவமாயின், அது தொடர்பில் தங்களுக்கு அறிவித்தால், அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் வேதனம் தொடர்பில், இழுபறியின்றி ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 107 ஆவது ஜனதினம் தின நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.