மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே தனது நோக்கம்- ஜனாதிபதி
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நெலுவ லங்காகம வீதி புனரமைப்பின் காரணமாக சிங்கராஜவனத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) குறித்த பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்தாலோனையிலும் ஜனாதிபதி ஈடுபட்டார்.