மோசடிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள திட்டம்..!

மோசடிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள திட்டம்..!

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில், அரசாங்கத்தின் நான்கு பிராதன வங்கிகளிலும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வங்கிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் அடங்கிய குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த வங்கிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்கள் அறிந்திருப்பார்களாயின், அது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை வழங்க வேண்டும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பணிப்பாளர், பொது நிறுவனத்துறை திணைக்களம், நிதி அமைச்சு செயலக காரியாலயம், கொழும்பு 1 என்ற முகவரிக்கு அந்த தகவல்களை அனுப்பி வைக்க முடியும் என அறிக்கை ஒன்றின் ஊடாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.