நெருங்கிவிட்டோம்! அமெரிக்க வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நெருங்கிவிட்டோம்! அமெரிக்க வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் சோதனையில் நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க கொரோனா வைரஸ் நிபுணரும் வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான டாக்டர் அந்தோணி பாசி கூறியுள்ளார்.

பயோடெக்னோலஜி கண்டுபிடிப்பு அமைப்பு (BIO) நடத்திய கூட்டத்தின் போது தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான பாசி தனது கருத்துக்களை தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

கொரோனா தொற்று நோயை அவரது "மோசமான கனவு" என்றும் விவரித்தார். நான்கு மாத காலப்பகுதியில், இது உலகம் முழுவதையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை.