கல்வி அமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ள செய்தி..

கல்வி அமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ள செய்தி..

அகில இலங்கை ரீதியிலான அனைத்து அரச பாடசாலைகளிலும் கல்வி கற்கும் முதலாம் தர மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான (வவுச்சர்) கட்டண அட்டை செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் வகையில் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வவுச்சர் நடப்பு ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், நாட்டில் நிலவிய கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது