வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு பேரிடியாய் வந்த செய்தி

வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு பேரிடியாய் வந்த செய்தி

கொரோனா தொற்றை அடுத்து அரசாங்கத்தினால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் போதியளவு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பெருமளவில் நாட்டுக்கு அழைத்து வந்ததே இந்த நிலைக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

எனவே வெளிநாடுகளில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை கால வரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இஸ்ரேலில் இருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு குழுவினரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.