குடும்பத்தாரை கொடூரமாக கொலை செய்த இந்தியா வீரர்! அமெரிக்காவில் கைது
தாய் மற்றும் மனைவி ஆகியோரை கொலை செய்த வழக்கில் இந்தியாவின் முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள நிலையில், தகவல் அறிந்த பொலிஸார் இக்பால் சிங்கின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்பின், பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் வீட்டினுள் கிடந்த இக்பால் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதன்பின் விசாரணைகள் இடம்பெறுகிறது.
இக்பால் சிங், தனது தாய் மற்றும் மனைவி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
62 வயதான இவர் இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரர் என்பதுடன், 1983ஆம் ஆண்டு குவைத்தில் இடம் பெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்.
பின் அமெரிக்கா சென்று குடியேறி பென்சில்வேனியாவில் உள்ள நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வந்தமை குறிப்படத்தக்கது.