கடலில் நீராடச்சென்று மாயமான இரண்டாவது இளைஞனின் சடலமும் மீட்பு

கடலில் நீராடச்சென்று மாயமான இரண்டாவது இளைஞனின் சடலமும் மீட்பு

கல்கிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற நிலையில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நுவரெலியாவை - பூண்டுலொயாவைச் சேர்ந்த இளைஞர்களில் இரண்டாவது இளைஞரின் சடலம் நேற்று வெள்ளவத்தை பகுதியில் கரையொதுங்கியது.

கல்கிஸ்ஸை கடலுக்கு நீராடச் சென்ற நிலையில் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போய் இருந்தனர்.

பூண்டுலோயா - ஹெரோ பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய் இருந்தனர்.

அவர்களில் ஒருவரின் சடலம் நேற்று காலை கரையொதுங்கிய நிலையில் மற்றுமொருவரின் சடலம் நேற்றிரவு வெள்ளவத்தைப் பகுதியில் கரையொதுங்கியதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த இளைஞர்கள் இருவரும் கொழும்பில் எங்கு பணியாற்றினார்கள் போன்ற விபரங்களை அவர்களது வீட்டார் அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞர்களின் உறவினர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.