
மற்றுமொரு நாடும் கொரோனாவிலிருந்து விடுதலை
நியூசிலாந்தை தொடர்ந்து தங்கள் நாடு கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று விட்டதாக தான்சானியா அதிபர் அறிவித்துள்ளார்.
சாத்தானின் வேலையை தான்சானியா தோற்கடித்து விட்டதாகவும் John Magufuli கூறியுள்ளார்.
ஏப்ரல் 29-க்கு பின்னர் கொரோனா தொடர்பான எந்த புள்ளி விபரத்தையும் தான்சானியா வெளியிடவில்லை. அன்றைய நாளின்படி அங்கு 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 29 பேர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், பரிசோதனைக் கருவிகளின் தவறால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க நேர்ந்தது என்றும் அதிபர் கூறியிருந்தார்.