விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் குழந்தைகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் 46 குழந்தைகளை விடுவிப்பது தொடர்பில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடயத்திற்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளேவிற்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கமைய இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளேவின் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சின் மேலதின செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தற்போது விளக்கமறியலில் 46 தாய்மார்கள் உள்ளனர்.
அவர்களில் 7 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் குற்றச்சாட்டுப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள்
அவர்களுக்கான விசாரணைகளை விரைவில் முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் தமது தாயுடன் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாடோ புள்ளே குறிப்பிட்டார்.