260 க்கும் மேற்பட்ட அகதிகளுடன் மலேசியா சென்ற படகு - பெண்ணின் உடலும் மீட்பு

260 க்கும் மேற்பட்ட அகதிகளுடன் மலேசியா சென்ற படகு - பெண்ணின் உடலும் மீட்பு

மலேசியாவின் Langkawi கடல் பகுதியில் 260 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுடன் சென்ற படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதில் 53 ரோஹிங்கியாக்கள் கரையை அடையும் முயற்சியில் கடலில் குதித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி சேதமடைந்த படகிலிருந்து 216 பேரும் ஒரு பெண்ணின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா அகதிகள் வந்த படகு சேதமடைந்த காரணத்தால், இவர்களை நாடுகடத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை.

மலேசியாவின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி, ஜூன் மாதம் வரை 7,396 சட்டவிரோத குடியேறிகளும் 11 மனித கடத்தல்காரர்கரர்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.