வேககட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீட்டின் மீது மோதியது -சிறுவன் உட்பட ஐவர் படுகாயம்

வேககட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீட்டின் மீது மோதியது -சிறுவன் உட்பட ஐவர் படுகாயம்

கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, வேககட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில், குறித்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் ஐவர் கடும் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து, இன்று பண்டாரவளை ஹல்துமுல்லை நகரில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பெண்கள் மூவரும், ஒரு ஆணும், ஒரு சிறுவனும் காயமுற்றவர்களில் அடங்கியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் நால்வர் தியத்தலாவ அரசினர் மருத்துவமனையிலும், மற்றயவர் ஹல்துமுல்லை அரசினர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

பேருந்து மோதிய வீட்டில் எவரும் இல்லாதலால், எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும், குறிப்பிட்ட வீட்டிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஹல்துமுல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசன்ன த சில்வா தலைமையிலான குழுவினர் மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.