உப பிரதமர் நியமிக்க வேண்டிய தேவை இல்லை- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

உப பிரதமர் நியமிக்க வேண்டிய தேவை இல்லை- அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சுயாதீன ஆணைக்குழுக்களைப் போல அரசியல்மயமாக்கப்பட்ட வேறு எந்தவொரு நிறுவனங்களும் இல்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் கருத்துரைத்த அவர், புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் உப பிரதமர் நியமிப்பது தொடர்பில் உத்தியோகபூர்வ முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உப பிரதமர் நியமிப்பதற்கான அவசியம் ஏற்படுமானால் அது தொடர்பில் ஆராய்வதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.