அமெரிக்காவில் போராட்டத்தை கட்டுப்படுத்த களத்தில் இறக்கப்பட்ட படைக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் போராட்டத்தை கட்டுப்படுத்த களத்தில் இறக்கப்பட்ட படைக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்ட தேசிய காவல்படை அதிகாரிகள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவ்விடயம் தெரியவந்தது.

பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு, எத்தனை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கொலைக்குப் பின் வாஷிங்டனில், வெள்ளை மாளிகையிலும் மற்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.

இந்த நிலையில் மேயரால் குறித்த அதிகாரிகள் பணிக்கு அழைக்கப்பட்டனர்.

கலவரக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடும் முன்னரும் பின்னரும் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு இடைவெளி, முடிந்த அளவில் உறுதிசெய்யப்பட்டதாக காவல்படை தெரிவித்தது.

ஆனால், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டபோது, பொதுமக்களில் பலரும், அதிகாரிகளும் முகக் கவசங்களை அணியவில்லை.

கொரோனா பாதிப்பில் முலிடத்திலுள்ள அமெரிக்காவில் போராட்டத்தை அடக்கச் சென்ற அதிகாரிகளுககே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றால்,

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.