பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறைச்சாலையில் உள்ள தாய்மார்களுடன் அடைக்கப்படும் குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
5 வயதிற்கு உட்பட்ட 46 குழந்தைகள் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் தங்கள் தாய்மார்களின் பராமரிப்பில் உள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையில் பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் பராமரிப்பில் உள்ள சிறு குழந்தைகள் குறித்து பிரதமர் தற்போது கவனம் செலுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குழந்தைகள் குறித்த தகவல்களைத் தேடியதுடன், குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.