பிரதமர் மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஆஸி. பிரதமர் மொரிசன்

பிரதமர் மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஆஸி. பிரதமர் மொரிசன்

பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது இரு நாட்டுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான உறவுகளை மேலும்  அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறினார்.

இதேவேளை கொரோனா தொற்று நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மொரிசனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பிற்கு பிரதமர் ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோரிசன், இலங்கைக்கு தான் முன்னர் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்ததுடன் “இலங்கை ஒரு அழகான நாடு” என்றும் விரைவில் மீண்டும் வருகை தருவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.