கொழும்பில் மிதக்கும் வர்த்தக தொகுதி! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பில் மிதக்கும் வர்த்தக தொகுதி! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கோட்டை மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவின் தலைமையில் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த நான்கரை வருடங்களாக கோட்டை மிதக்கும் சந்தை தொகுதி உரிய முறையில் பராமரிக்கப்படாமையினால் அங்குள்ள நூற்றுக்கு 80 வீதமான கடைகளை மூட நேரிட்டதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதக்கும் சந்தை உள்ள ஏரியின் நீர் சுத்தமாக இல்லாமையினால் கடந்த நாட்களாக சுற்று சூழல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அதனை உடனடியாக திருத்தியமைக்க உத்தரவிட்டுள்ளார்.