அரச பணியாளர்களுக்கு 20 இலட்சம் ரூபா நஷ்டஈடு!

அரச பணியாளர்களுக்கு 20 இலட்சம் ரூபா நஷ்டஈடு!

அரச பணியாளர்கள் சேவையின் போது உயிரிழந்தால் நஷ்டஈடாக 20 இலட்சம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பணியில் ஈடுபட்டுள்ள குடும்பத் தலைவரொருவர் சேவையின் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா நஷ்டஈடு அந்த குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதற்கும் போதுமானதாக அமையாது.

ஆகவே 5 இலட்சம் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை 20 இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.