சௌமியமூர்த்தி தொண்டமானின் 107வது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் ஆவணக் கண்காட்சி ஏற்பாடு
மறைந்த முன்னாள் மலையகத்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 107வது ஜனனதினத்தை முன்னிட்டு மலையக வரலாறு பற்றிய பல அபூர்வ தகவல்களை அறிந்து கொள்ளக்கூடியவகையில் காணொளி காட்சிகளுடன் கூடிய மாபெரும் ஆவணக் கண்காட்சி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மலையக சமூக வரலாறு என்பது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பிரசன்னத்தின் பின்னரேதான் பிரதான பேசும் பொருளானது. ஐயாவின் சாணக்கியமும்ரூபவ் ஆளுமையும் தலைமைத்துவத்தின் இலக்கணமான வரலாற்று விழும்பியங்களை இன்றைய தலைமுறையும் இனிவரப்போகும் தலைமுறையும் உள்ளதை உள்ளப்படியே உள்வாங்கி கொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் அபிலாசையும்; வாஞ்சையுமாகும்
அமரர் சௌமியமூர்த்தி தொண்டானின் நினைவு தினம் பற்றி ஏற்கனவே எமது வேண்டுகோளை ஏற்று ஆவணத் தொகுப்புக்காகவும் காட்சிப்படுத்துவதற்காகவும், அரிய தகவல்களை சான்றுகளுடன் சமர்ப்பித்தவர்கள் ஏராளம்.
இன்னும் சிலர்வசம் இது போன்ற மகத்தான குறிப்புகள் ஐயா சம்பந்தப்பட்ட கடிதங்கள், கையெழுத்து பிரதிகள்,புகைப்படங்கள், பத்திரிகை துணுக்குகள் இருக்கலாம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவற்றை கீழே காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். எதிர்வரும் 30ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 107வது ஐனன தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள கண்காட்சியில் நீங்கள் அனுப்பும் அம்சங்கள் உங்கள் பெயர்,விபரங்களுடன் இடம்பெறும். உங்களின் பங்களிப்பு பற்றிய பதிவும் மேற்கொள்ளப்படும்.
இதேவேளை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பற்றிய நிகழ்வுகள் அடங்கிய காணொளி காட்சிகள் இடம் பெறவுள்ளன. ஆவணக் கண்காட்சி நிறைவுற்றப்பின் நீங்கள் வழங்கிய சாதனங்கள் மீண்டும் உங்களிடமே கையளிக்கப்படும் என்பதே உறுதி செய்கின்றோம்.
எனவே சமூக ஆர்வாலர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எல்லோருமே இத்தேடல் முயற்சிக்கு பங்களிப்பினை வழங்க வேண்டுமென்று விநயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்பு உங்கள் தகவல்களை எமக்கு அனுப்பி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்காக சிரேஷ்ட ஊடக இணைப்பாளர், 72,ஆனந்த குமாரசுவாமி மாவத்தைரூபவ் கொழும்பு 7. தொலைபேசி எண் 0716876548, 0705867977 மின்னஞ்சல்- savarimuthudevadas@gmail.com, cwcmedia72@gmail.comஎன்பனவற்றுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.