வன்னியில் ஆசிரியர்கள், வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வன்னியில் ஆசிரியர்கள், வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வன்னி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பி வைத்தியசாலைக்கு தகுதியான வைத்தியர்கள், பாடசாலைகளுக்கு தகுதியான ஆசிரியர்களை நியமித்துத்தருமாறுஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு . திலீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள திலீபன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி கோட்டபாயவிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போது இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகள் , வைத்தியசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை நியமித்து தருமாறும் நீண்டகாலமாக காணி உறுதிகள் பெற்றுக்கொள்ள முடியாமலிருப்தையும் கவனத்திற்கொண்டு இக்கோரிக்கையினை விரைவுபடுத்தி பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரியிருப்பதாகவும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார் .

இதேவேளை நேற்று ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறித்த விடயங்களை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.