சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா..!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2927 அக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2918 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 24 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 789 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 127 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.