நாடாளுமன்ற தேர்வு குழு உறுப்பினர்கள் நியமனம்
9வது நாடாளுமன்ற முதல் அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் 12 பேர் கொண்ட நாடாளுமன்ற தேர்வு குழு நயமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னண்டோ, டக்லஸ் தேவாநந்த, டலஸ் அழகபெரும, விமல் வீரவங்க மற்றும் பிரசன்ன ரணத்துங்க உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷடன் கிரியெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருநாதிலக்க, ரவூப் ஹக்கீம், விஜித்த ஹேரத் மற்றும் செல்வம் அடைக்களனாதன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்வு குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.