மைத்திரிக்கு தயாராகும் முக்கிய பதவி!

மைத்திரிக்கு தயாராகும் முக்கிய பதவி!

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பதவியை வழங்குவது தொடர்பான இணக்கம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு யோசனைகளை முன்வைக்க குழு ஒன்றை நியமிக்கவும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவராக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தனக்கு வழங்கப்பட உள்ள பதவி குறித்து எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.